இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மின் கட்டணம் செலுத்த புதிய நடைமுறை!!

Electricity bill

இலங்கை மின்சார சபையானது முன் அச்சிடப்பட்ட கட்டணங்களை வழங்கும் முறைக்கு பதிலாக மூன்று புதிய முறைமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, மின்கட்டண பட்டியலினை எதிர்பார்க்கும் எந்தவொரு நுகர்வோருக்கும், மாதாந்திர மீட்டர் வாசிப்பின் போது வெப்ப காகிதத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட பட்டியல்கள் வழங்கப்படும்.

குறுஞ்செய்தி மூலம் மீட்டர் வாசிப்பினை பெற்று மின்சார சபையில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மாதாந்த மின்சாரக் கட்டணத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

CEBCare என்ற மொபைல் செயலி மூலமாகவும் நுகர்வோர் கட்டண பட்டியலினை பெறலாம்.மிகவும் திறமையான நுகர்வோர் சேவையை வழங்குவதையும் அரச துறைகளை டிஜிட்டல் மயமாக்குவதையும் இலக்காகக் கொண்ட தற்போதைய திட்டத்தின் மற்றுமொரு படியாக கட்டண பட்டியல்களை வழங்குவதற்கான மூன்று புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக CEB தெரிவித்துள்ளது.

மேலும், நான்காவது முறையாக மின் அஞ்சல் மூலம் மின் கட்டணங்களை வழங்குவதற்கு தேவையான தொழில்நுட்ப நடைமுறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நிலவும் காகிதத் தட்டுப்பாடு காரணமாக மின்சாரக் கட்டணங்களை முன்கூட்டியே அச்சிட்டு விநியோகிப்பது சாத்தியமில்லை என்பதனால் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறைகளை ஏற்றுக்கொள்வது செயல்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பில்களை அச்சடிப்பதில் அதிகரித்து வரும் செலவைக் கருத்தில் கொண்டு வருடாந்தம் ரூ.1 பில்லியனுக்கும் அதிகமான சேமிப்பிற்கும் பங்களிக்கும் என்று CEB நம்புகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button