இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மின் வேலியில் சிக்கி குடும்பஸ்தர் சாவு – பெண் கைது!!

Electric fence

அம்பாறை, மஹஓய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போகமுயாய பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்றிரவு உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

போகமுயாய, மஹஓய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயது நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

காட்டு யானைகளின் வருகையைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து சட்டவிரோதமாக மின் வேலியை அமைத்த பெண்ணொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

போகமுயாய பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செய்தியாளர் – சுடர்

Related Articles

Leave a Reply

Back to top button