உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!
Election
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ம் திகதி நடத்த முடியாத நிலை உருவாகி இருப்பதாகவும், அது பிற்போடப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெற்றிருந்தது.
இதன்போது தேர்தல்களுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டமை மற்றும் திட்டமிட்ட வகையில் நாளை முதல் அஞ்சல் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை போன்ற விடயங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா விளக்கியுள்ளார்.
தாங்கள் கோரியபடி திரை சேறி தேர்தலுக்கான நிதியை இன்னும் வழங்கவில்லை என்றும், இதனால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து உச்ச நீதிமன்றிற்குத் தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் கட்சி செயலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் அய்வரி செய்திகளுக்கு இந்த விபரங்களை வழங்கினர்.