இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கும் தென்மராட்சி கிருஷ்ணன் ஆசிரியர்!! 

Election

பிறப்பில் இருந்து ஓய்வு பெறும் வரையில் மட்டுவில் – தென்மராட்சியின் வளரச்சிக்காக தன்னை அரப்பணித்த கிருஷ்ணன் ஆசிரியர்  முன்னைய காலங்களில் சிறப்பான கற்பித்தல் மூலம் சமூகக்கல்வி பிரபல ஆசிரியராக இருந்து சகலருக்கும் அறிமுகமாகி 

மட்டுவில் மகாவித்தியாலயத்தில்  

நீண்ட காலம் ஆசிரிய பணியாற்றி பின்பு மட்டுவில் வடக்கு அ. த.க பாடசாலையில் அதிபராக கடமையாற்றி  பெறுபேறுகளில்  பல மாற்றங்களை  ஏற்படுத்தி தற்போது ஒய்வு நிலையில் உள்ளவர். 

இவர் தற்போது இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களின் வேண்டுகோளை ஏற்று J/309,310,311 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் தமிழரசுக் கட்சி சார்பாக  தேர்தலில் போட்டியிடுவதாக  ஐவின்ஸ் தமிழ் இணையதளத்திற்குத் தெரிவித்துள்ளார் . 

இவர் தனது இளமைக்காலம் முதல் மட்டுவில் வளர்மதி கல்வி நிலைய பொறுப்பாசிரியராக இருந்து பல பொருளாதார வளம் குறைந்த மாணவர்களுக்கு இலவசமாகக் கற்பித்து, மாணவர்கள் பலரைக் கல்வியில் உயர்த்தியவர் எனவும் 

வளர்மதி சனசமூக நிலைய பிரதான பதவிகளில்,   கட்டமைப்புகளில் மிக அதிக வருடங்கள் கிராமிய மட்டத்தில் சமூக சேவை புரிந்தவர் என்ற சாதனைக்கு உரியவர் எனவும்  அறியக்கிடைக்கிறது. 

அத்துடன் மட்டுவில் பகுதிகளில் இடம்பெறும் சகல சமூக நலன்சார் நிகழ்வுகளிலும் இவரது பங்களிப்பு அதிகமாகவே இருந்துள்ளது எனவும் தெரியவருகின்றது. 

இவரை ஐவினஸ் இணையதளம் மேலும் விசாரித்த போது,  இந்தத் தேர்தலில் தான் வெற்றி பெற்றால்,  மட்டுவில் பகுதியில் சமநிலையான கல்வி வளர்ச்சியிலும் , வறுமைத் தணிப்பு  நடவடிக்கைகளிலும்,  கிராமிய உட்கட்டுமான அபிவிருத்தியிலும் ,

மக்களின் 

அரசியல் ரீதியான அபிலாசைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுவேன் எனவும் உறுதிபடத் தெரிவித்தார் . 

இவர் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிக வாக்குகள மூலம் வெற்றி பெற்று 

மேலும் பல அரசியல் வெற்றிகள் பெற ஜவினஸ் தமிழும் வாழத்துகிறது .

Related Articles

Leave a Reply

Back to top button