கட்டுரைசெய்திகள்முக்கிய செய்திகள்

மக்களே, யாருக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்?

Election

யாருக்கு வாக்களிப்பது மக்களே ?
உள்ளுராட்சி நிறுவனத் தேர்தலில் போட்டியிட்டு ஒற்றையாட்சி எதிர்ப்போம் சமஸ்டியை ஆதரிப்போம், தேசம், சுய நிர்ணயம் சுயாட்சி பற்றி கதைப்போரை என்ன சொல்வது என்பது பற்றி மக்கள் நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

அவர்களுக்குச் சொல்லுங்கள், இது லோக்கல் கவர்மெண்ட் தேர்தல் தமிழில் உள்ளூராட்சி சபை தேர்தல் என சொல்லுங்கள்.உள்ளூராட்சி அமைச்சின் இணையம், அரச அச்சுக்கூட்டுத்தாபன இணையம் ஆகியவற்றில் இருக்கின்ற சட்ட ஏற்பாடுகளையும் அதிகார பரவலாக்கத்தின் கீழான ஏற்பாடுகளையும் பார்க்க வழிப்படுத்துங்கள்.

சரி

வாக்காளராக நீங்கள் உங்கள் படலைக்கு வர இருக்கும் வேட்பாளர்களிடம் கேட்க வேண்டிய விடயங்கள் எவை.

1)பிரதேசத்தின் அடிப்படை வளத்தேவைகள் எவையென இனங்கண்டிருக்கின்றீர்களா அதனை பாதுகாக்க பயன்படுத்த முகாமை செய்து மேம்படுத்த ஏதாவது திட்டங்கள் இருக்கின்றதா?

2)பிரதேச வளங்களை முகாமை செய்து அதனை பிரதேசத்தின் வள மேம்பாட்டுக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும்?.

3)பிரதேச வளங்களை பாதுகாப்பதற்கான விசேட திட்டங்களை எவ்வாறு வடிவமைக்கலாம்.

4)பிரதேசத்தில் இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி பேண்தகு அபிவிருத்திக்கான அடிப்படைகளை எவ்வாறு நிறுவ முடியும்.

5)தான் அங்கம் வகிக்கும் உள்ளூராட்சி மன்றத்தின் நிதியீட்டலுக்கான நுட்பங்கள் எவை? அதை எவ்வாறு பிரதேசத்தின் மேம்பாட்டுக்கு பயன்படுத்த முடியும்.

6)உள்ளூராட்சி சட்டத்தின் எல்லைகளுக்குட்பட்டு சுய தொழில் மேம்பாட்டு திட்டங்களை எவ்வாறு வகுக்க முடியும்.

7)பிரதேசம் சார் பொருளாதாரத்திற்கு பங்களிப்புச் செய்யவும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கும் எவ்வாறு உள்ளூராட்சி மன்றங்களால் பங்களிப்பு செய்ய முடியும்.

9)மின்சார விளக்குகள் , பாதைகள் குடி நீர் உட்பட்ட பிரதேச மேம்பாட்டினை அடிப்படையாக கொண்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எத்தகைய கொள்கைகளை கைவசம் வைத்துள்ளீர்கள்?

10)கழிவு முகாமைத்துவமும் அனர்த்த முகாமைத்துவமும் பிரதேச அபிவிருத்திக்குத் தேவையானவை, இவை தொடர்பில் எத்தகைய கொள்கைகளை கைவசம் வைத்துள்ளீர்கள்?

இவற்றோடு பிரதேசத்தின் தன்னிறைவு , வளப்பாதுகாப்பு , வளப்பங்கீடு, கழிவு முகாமைத்துவம், இயற்கை சூழல் பாதுகாப்பு, வரிவசூலிப்பு, பொழுது போக்கு, நலன் பேண் வேலைத்திட்டங்கள், புத்தாக்குனர் சார் செயற்பாடுகள், இலக்கியம் கலை மேம்பாடு, சுகாதாரம், அடிப்படை தேவைகளுக்கான வளப்பகிர்வு, குடிசைக்கைத்தொழில் மேம்பாடு, ஊழியர் படையணி உருவாக்கல் உட்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் உள்ளூராட்சி சட்டத்தின் எல்லைகளுக்குட்பட்டு எத்தகைய வேலைத்திட்டங்கள், கொள்கைகள் , கருத்தியல்கள் , திட்டமிடல்கள் என்பவற்றை வைத்திருக்கின்றீர்கள் என உங்கள் படலையை தட்டும் வேட்பாளர்களிடம் கேளுங்கள். இவற்றின் கொள்கைகள் திட்டங்கள் பகிரப்படுத்துவீர்களா என கேளுங்கள். பகிரங்கப்படுத்தும் தரப்புக்கு உங்கள் வாக்கை செலுத்துங்கள்.
( நன்றி : அரசியல் ஆசிரியர் ஹரிகரன்)

Related Articles

Leave a Reply

Back to top button