இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்ட எக்னெலிகொட – தொடரும் நீதிக்கான போராட்டம்!!

Egnelikoda

2010 ஜனவரி 24ஆம் திகதியன்று இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் – பலவந்தமாக காணாமல் போகச் செய்யப்பட்டஇ ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடஇ தொடர்பில் இதுவரை எந்த குற்றவாளியும் பொறுப்புக்கூறப்படவில்லை என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

அவர் காணாமல் போகச்செய்யப்பட்டு நேற்றுடன் 13 வருடங்கள் கடந்துள்ளன.

இந்தநிலையில் விசாரணைகள் குறைந்தபட்சம் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை நிறைவேற்றியவர்களில் சிலரை வெளிப்படுத்தினாலும்இ நீதி மழுப்பலாகவே உள்ளது என்று மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னலிகொட இந்த வழக்கின் சார்பாக தொடர்ந்து ஆவேசமாக வாதிட்டார்இ ஆனால் இன்றுவரை எந்த குற்றவாளியும் பொறுப்புக் கூறப்படவில்லை என்றும் மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

2010 ஆம் ஆண்டுஇ பிரகீத் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட பிறகுஇ சந்தியா தனது கணவரைப் பற்றிய தகவல்களைக் கோரி அவரை விடுவிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

2015 ஆம் ஆண்டு பிரகீத்தின் வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டபோதுஇ படைத்தரப்பைச் சேர்ந்த 12 பேர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு காவல்துறையினரின் விசாரணையில் பிரகீத்இ இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயேஇ கிரிதலையில் உள்ள இராணுவ முகாமில் உயிருடன் இருந்தார் என்பது தெரியவந்தது.

படைவீரர்கள்இ முன்னாள் வீரர்கள் மற்றும் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் அனைவரிடமும் அவர் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால் எவரும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இலங்கை இராணுவம் பலமுறையும் எந்தவொரு விசாரணைக்கும் ஆதரவளிக்கத் தவறியதுடன்இ அதற்குப் பதிலாக பிரகீத்தின் நிலை பற்றிய தகவல்களைத் தடுத்து நிறுத்துவதற்காகஇ தேசியப் பாதுகாப்பு பிரச்சினைகளை ஒரு காரணமாகக் குறிப்பிட்டு வந்தது.

பிரகீத் ஒரு ஊடகவியலாளர் மற்றும் கேலிச்சித்திரத் துறையை சேர்ந்தவர் என்ற அவரது பணி தொடர்பாக மட்டும் குறிவைக்கப்படவில்லை.

ஊழல் மற்றும் மோசடி செய்பவர்கள் என்று கருதும் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை பகிரங்கமாக விமர்சித்தமையாலும்இ அவர் குறிவைக்கப்பட்டார்.

எதிர்ப்பை மௌனமாக்குவதற்கும் எதிர்ப்பை அடக்குவதற்கும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திய நீண்ட வரலாற்றை இலங்கை அதிகாரிகள் கொண்டுள்ளனர்.

வலுக்கட்டாயமாக அல்லது தன்னிச்சையாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் முன் நிலுவையில் உள்ள விசாரணைகளின் பட்டியலில்இ இலங்கை உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

1980 களில் இருந்து நாட்டில் 60இ000 முதல் 100இ000 வரை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இதில் தெற்கில் இளைஞர் எழுச்சிகளிலும் வடக்கில் உள்நாட்டுப் போரிலும் பங்குபற்றியர்வர்களும் அடங்குவர்.

பிரகீத்தை கடைசியாகப் பார்த்த நாள்இ அவர் அணிந்திருந்த உடைகள் உட்பட ஒவ்வொரு விபரமும் சந்தியாவுக்கு நினைவிருக்கிறது.

அவர்இதமது மூத்த மகனிடமிருந்து ஒரு வெள்ளை சட்டையை கடன் வாங்கினார்இ விரைவில் வீட்டிற்கு வருவேன் என்று உறுதியளித்தார்.

எனினும் இன்னும் சந்தியாவும் அவரது இரண்டு மகன்களும் பிரகீத் வருகைக்காக 13 வருடங்கள் காத்திருக்கின்றனர். நீதி கிடைக்கவில்லை. இடைப்பட்ட ஆண்டுகளில்இ சந்தியா மிரட்டப்பட்டுஇ அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.

எனினும் நீதிமன்றங்களிலும்இ நேரில் மற்றும் சமூக ஊடகங்களில் உண்மையையும் நீதியையும் கோருவதற்காக. அவர் பிடிவாதமாக உள்ளார்.

2016 ஆம் ஆண்டில் அனைவரையும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையை இலங்கை அங்கீகரித்துள்ளது.

எனினும்இ பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள்இ முழுமையான இழப்பின் உணர்வோடு திகைத்து நிற்கின்றன.

2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அரசாங்கம் 65இ000 இற்கும் மேற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு “காணக்கிடைக்கவில்லை சான்றிதழ்” வழங்க ஆரம்பித்ததுடன்இ காணாமல் போனவர்களின் சொத்துக்களை தற்காலிகமாக நிர்வகிப்பதற்கும்இ இறப்புச் சான்றிதழை ஏற்றுக்கொள்ளாமல் அரசாங்க நலன்புரி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் அனுமதித்தது.

2015 இல் இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களை விசாரிக்கும் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டது.

அதுஇ வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 10இ000 பேரின் பட்டியலை வெளியிட்ட போதிலும்இ வடக்கில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நம்பிக்கையைப் பெறுவதுடன் மட்டுமல்லாமல்இ இந்த வழக்குகள் தொடர்பான விசாரணைகளை திறம்பட மேற்கொள்ளவும் அது தவறிவிட்டது என்று சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

நன்றி – கிரு செய்திகள்

Related Articles

Leave a Reply

Back to top button