இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கோழி இட்ட வித்தியாசமான முட்டை!!

Egg

 நானுஓயா –  மஹாஎலிய பிரதேசத்தில் கோழியொன்று வித்தியாசமான முறையில் முட்டை ஒன்றை இட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 சில வருடங்களாக உரிமையாளர் கிருஷாந்தன் இந்தக் கோழியை வளர்த்து வரும் நிலையில் சாதாரண முட்டையையே இட்டுள்ளது. 

இந்நிலையில் திடிரென நேற்றைய தினம் ‘யு’ வடிவிலான முட்டையை இட்டுள்ளதால் உரிமையாளர் வியப்படைந்துள்ளார்.

அப்பகுதி மக்கள்  இந்த வினோத முட்டையைப் பார்ப்பதற்குச் செல்வதாகவும் கோழிகளுக்கு ஏற்படும் மரபணு மாற்றமே இவ்வாறான முட்டைகள் இடுவதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான முட்டைகள்,  உண்பதற்கு உகந்ததல்ல எனவும் மீள கோழிக்குஞ்சுகள் அடைகாக்கச் செய்யும் நடவடிக்கைகளுக்கும் உகந்ததல்ல எனவும் கூறப்படுகிறது. 

இவ்வாறான முட்டைகளில் மஞ்சள் கருவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button