கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி பதவியில் அரசியல் தலையீடு செல்வாக்குச் செலுத்துமா!!
Eastern university
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதி நேர்முகத்தேர்வு இன்று நடைபெறவுள்ள நிலையில், இப்பதவி குறித்து சர்ச்சை உருவாகியுள்ளது.
குறித்த பதவிக்கு தகுதியல்லாத பேராசிரியர் ஒருவர் அப்பதவியை தனக்குப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறு மட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவரின் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளாராம்.
மேலும் இது குறித்து தெரிய வருவதாவது,
குறித்த பேராசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஒரு நிறுவகத்திற்கு தமது மனைவியையும் பணிப்பாளராக்குவதற்கு இவ்வாறுதான் இப்போது இராஜாங்க அமைச்சராக உள்ளவர் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவேளையில், தவம் கிடந்து பதவியைப் பெற்றுக் கொடுத்தாராம்.
கிழக்குப் பல்கலைக்கழத்தின் இன்றைய அழிவிற்கு காரணமானவர்களில் இவரும் ஒருவர், பதவிக்காக கதிரைகளைத் தேடி அலைவதே அவரது முழுநேரத் தொழில், இவரின் பேராசிரியர் பதவி தொடர்பிலும் பல தில்லு முல்லுகள் உள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிப்பதாக. கூறப்படுகிறது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நீண்ட கால முயற்சியால் கிடைத்த உயர்பட்டப்படிப்புகள் பீடம், புகழ் விரும்பியான பேராசை பிடித்த மனிதனின் கைகளுக்கு செல்லுமாக இருந்தால் குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போன்று ஆகி விடும் என அங்குள்ள கல்வியியலாளர்கள் பெருங் கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
திறமையான பலர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“சமூக நலன்விரும்பிகளே விழத்தெழுங்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்தை இந்த நரிக்கூட்டத்தில் இருந்து காப்பாற்றுங்கள்” என மட்டக்களப்பு மாணவர் சமூகம் அனுப்பி வைத்துள்ள செய்தியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உயர்பட்டப்படிப்புகள் பீடத்திற்கான பீடாதிபதியாக தகுதியில்லாத பேராசிரியர் நியமிக்கப் படுவாராக இருந்தால் மூன்று மாத காலத்தில் குறித்த பீடம் இழுத்து மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதை இன்றைய தெரிவுக் குழு தீர்மானிப்பது காலத்தின் கட்டாயம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது