ஜப்பானில் 6.1 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு ஜப்பானில் உள்ள அமோரி மாகாணத்திலே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் அமோரியின் கிழக்கு கடற்கரையில் சுமார் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
அதேநேரம் இதனால் உண்டான சேத விபரங்கள் குறித்தும் இன்னும் தெளிவான தகவல் இல்லை.