ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை 6.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் நெமுரோ தீபகற்பத்தில் 61 கிலோமீட்டர் (38 மைல்) ஆழத்தில் தாக்கியதாக தேசிய புவி அறிவியல் மற்றும் அனர்த்த முகாமை மையம் (NIED) தெரிவித்துள்ளது.
எனினும் அதிகாரிகளால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
பாதிப்பு விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.