இலங்கைசெய்திகள்

பெண்களை வன்முறையிலிருந்து மீட்க புதிய நடைமுறைத் திட்டம்!!

Domestic violence

சுகாதார அமைச்சின் கீழ் ‘மித்துறு பியஸ’ என்னும் பெண்களுக்கான ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு இச்சேவையின் மூலம் பயன்கள் கிட்டவுள்ளன.

இலவச சேவையாக வழங்கப்படுவதுடன், சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கப்படுவதுடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய தீர்வு வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படும்.

சில நிலையங்களில் வார இறுதி நாட்களில் சேவை வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள 80 வைத்தியசாலைகளில் மித்துறு பியஸ மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Back to top button