இன்று புதன்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 370 ரூபாயாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அனுமதி பெற்ற பல வர்த்தக வங்கிகளில் இந்த தொகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த உயர்வு காணப்படுவதாக கூறப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 368. 52 ரூபாவாகவும் கொள்முதல் விலை ரூ. 357.85ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும் உதவிகளை பயன்படுத்தி இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். "பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 3.2 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும்." "இந்தி திட்டம் ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஆறு…
வங்கி கணக்குகளில் இருந்து நூதனமான முறையில் 12.93 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக அளிக்கப்பட்டிருக்கும் புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கோவை கணபதி நகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் செல்போனுக்கு கடந்த 4ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் அவரது வங்கி கணக்கை முடக்கப்படும் நிலையில் உள்ளதாகவும், உடனடியாக அதை சரி செய்ய, அனுப்பப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுமாறு கூறப்பட்டதாம். அந்த லிங்கை…