இலங்கைசெய்திகள்பிரதான செய்திகள்

போதைப்பொருள் பாவனையிலிருந்து மீண்டு வருவதற்கு மருந்து கொடுக்கும் வைத்தியர்!

இலங்கையில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் வித்தியாசமான மருந்து கொடுக்கும் வைத்தியர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பாணந்துறை, பள்ளிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மாற்றாக சில மருந்துகளை அதிகளவில் வழங்குவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நாட்டில் தற்போது போதை பொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் அவர் இவ்வாறு மருந்துகளை வழங்குவதாக தெரியவந்துள்ளது.
இந்த வைத்தியரிடம் அதிகளவு மருந்துகள் பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

300 – 400 ரூபாய் பெற்றுக் கொண்டு இந்த மருந்துகளை அவர் வழங்குவதாக போதைக்கு அடிமையான குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் குறித்த வைத்தியரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

போதைப்பொருள் பாவனையிலிருந்து மீண்டு வருவதற்கே இந்த மருந்து வழங்கப்படுவதாக வைத்தியருக்கு நெருக்கமான நபர் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான செயல் ஆபத்தானது. இவ்வாறான செயலில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு வைத்தியர் பிரியங்கி அமரபந்து தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button