பிரித்தானிய நிதியமைச்சர் குவாசி குவார்டெங் பதவி நீக்கப்பட்டுள்ளதாகவு ஆறு வாரங்களுக்கும் குறைவான காலத்துக்கு பதவி வகித்த நிலையிலேயே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார், என்றும் கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் பாரிய வரிக் குறைப்புக்கள் நிதிச் சந்தைக் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்தே இது நிகழ்ந்திருக்கிறது.
1970ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரித்தானியாவில் குறுகிய காலத்துக்கு பதவி வகித்த நிதியமைச்சராக குவாசி குவார்டெங் கருதப்படுகிறார்.
மேலும் நாடு வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பல மாதங்களில் பிரித்தானியாவின் நான்காவது நிதி அமைச்சராக அவர் பதவி வகித்து வந்தார்.
இதேவேளை பிரித்தானிய திறைசேரியின் பிரதம செயலாளரான கிரிஸ் பிலிப்பும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹன்ட் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது