தொல்பொருள் திணைக்களம் மற்றும் இலங்கை தொல்பொருள் ஆய்வுத் துறையினர் பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாகக் கருதக்கூடிய சிவலிங்கம் ஒன்றை நேற்று {07.03.2021} கண்டுபிடித்துள்ளனர்.
“முற்கால சோழர் காலத்தில் பொலன்னறுவை இராச்சியத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான மற்றும் சிறிய சிவலிங்கங்களில் இதுவும் ஒன்றாகும். மக்கள் இதை யோனி கல் என்று அழைக்கிறார்கள்.
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலகட்டம், அதாவது கி.பி 9ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல் கட்டமைப்புகள் தொழிநுட்பம் கொண்டவையாகக் கருத முடியும் என பொலன்னறுவை பிரதேசத்திற்குப் பொறுப்பான தொல்பொருள் உதவிப் பணிப்பாளர் பி.எச்.நளின் வீரரத்ன தெரிவித்தார்.
பிரதேசவாசிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் படி இந்த சிவலிங்கத் தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலின்படி, நாங்கள் அதை பொலன்னறுவை தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு கொண்டு வந்தோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.