செய்திகள்விளையாட்டு

தல தோனியின் புதிய அவதாரம்!!

Dhoni

இந்திய அணியின் கேப்டனாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் தல தோனியை பார்த்த ரசிகர்களுக்கு தற்போது தல தோனியின் புதிய அவதாரம் ஒன்றை பார்க்கும் அதிஷ்டம் கிடைத்து உள்ளது.

தல தோனி கிராபிக்ஸ் நாவல் ஒன்றில் தோன்றி உள்ளதை அடுத்து அது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

‘அதர்வா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த கிராபிக்ஸ் நாவல் விரைவில் அமேசான் தளத்தில் பதிவு செய்யப்பட இருப்பதாகவும் இது குறித்த டீசர் வீடியோவை தல தோனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த கிராபிக்ஸ் வீடியோவில் புதிய அவதாரம் எடுத்துள்ள தோனியை பார்த்து அவரது ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். மிகவும் பிரமாண்டமாகவும் பெரும் பொருட்செலவில் இந்த கிராபிக்ஸ் நாவல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக கிராபிக்ஸ் நாவல் படிக்கும் குழந்தைகளுக்கும் தோனி ரசிகர்களுக்கும் இந்த கிராபிக்ஸ் நாவல் பெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நாவல் எப்போது அமேசானில் வெளிவரும் என்பதை எதிர்பார்த்து அனைவரும் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button