விவாகரத்து அறிவித்த 7 மாதங்களுக்கு பின் தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒன்றாக சந்தித்து கொண்டுள்ளார்கள். இதற்கு காரணம் தனுஷின் மூத்த மகன் யாத்ரா தான்.
ஆம், இன்று தனுஷ் – ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா தனது பள்ளியின் விளையாட்டு கேப்டனாக பதவியேற்றுள்ளார். அதைக் காணத்தான் தனுஷ் – ஐஸ்வர்யா சென்றுள்ளார்கள். அங்கிருந்து அவர்கள் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது