செய்திகள்விளையாட்டு

150 ஓட்டங்களைப்பெற்ற தனஞ்சய டி சில்வா!!

Dhananjaya de Silva

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா 150 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவர் 255 பந்துகளுக்கு முகங்கொடுத்து, 11 நான்கு ஓட்டங்கள், இரண்டு சிக்ஸர்கள் அடங்களாக 150 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இன்னிங்ஸுக்காகத் துடுப்பாடிய இலங்கை அணி 204 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸுக்காகத் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 253 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


Related Articles

Leave a Reply

Back to top button