உலகம்செய்திகள்

அமெரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசிகளை 1.5 கோடிபேர் பெற்றுகொண்டனர்

அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சம் பேர் ‘பூஸ்டர்’ என்ற மூன்றாவது தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கோவிட் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழப்புகளைச் சந்தித்த நாடு அமெரிக்காவாகும்.

அமெரிக்காவில் மொடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜோன்சன் & ஜோன்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கோவிட் தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 40,82,65,959 தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதில் 21,88,05,579 பேர் இதுவரை முதல் அளவு தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டனர். 18,91,41,481 பேர் தடுப்பூசியின் 2வது அளவுகளையும் செலுத்திக் கொண்டதாக அமெரிக்கச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் பைசர், மொடர்னா ஆகிய நிறுவனங்களின் 3வது அளவு ‘பூஸ்டர்’ தடுப்பூசியை சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இதுவரை செலுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button