லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து இன்று (13) காலை நீக்கப்பட்ட தெசார ஜயசிங்க மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (13) முற்பகல் முத்துராஜவெல மாபிம லிட்ரோ வளாகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது லிட்ரோ தலைவர் தெசார ஜயசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இந்த இடமாற்றம் தொடர்பில் தனக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தெசார ஜயசிங்கவை மீண்டும் தலைவர் பதவிக்கு நியமிக்குமாறு ஜனாதிபதி, நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, குறித்த நியமனத்தை ரத்துச் செய்வதற்கான கடிதம் நிதியமைச்சினால் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.