கனமழை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்து வருவதால், டெங்கு காய்ச்சலுக்கு புரூஃபன் அல்லது ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம். ஏனெனில் டெங்கு இருந்தால் இரத்தப்போக்கு பிரச்சினைகள் ஏற்படலாம் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்,
காய்ச்சலைக் குறைக்கவும் வலியைக் குறைக்கவும் பாராசிட்டமால் மாத்திரமே உட்கொள்ளுமாறும் தொடர்ந்து இரண்டாவது நாளாக காய்ச்சல் நீடித்தால் மருத்துவரின் அறிவுறுத்தலின்படி இரத்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் ருத்துவரின் அறிவுறுத்தலின்படி தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் வைத்தியர் டொக்டர் நிமல்கா தெரிவித்துள்ளார்.
வீட்டையும் சுற்றுப்புறத்தையும் உலர்வாகவும், சுத்தமாகவும் வைத்திருப்பதோடு ,நுளம்புகள் மற்றும் அவற்றின் முட்டைகளை அழிக்க பழைய டயர்கள் மற்றும் தண்ணீர் தேங்கும் கொள்கலன்கள் போன்றவற்றை வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வைப்பதைத் தவிர்க்குமாறும் அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் கூற்றுப்படி, இவ்வாண்டில் இதுவரை 31,450 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் , மேலும் அதிக எண்ணிக்கையிலானநோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர் .