ஜூன் மாதத்தில் மாத்திரம் 8,179 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனத் தெரிவித்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர, ஒரு மாதத்தில் பதிவான அதிகூடிய டெங்கு நோயாளர்கள் இதுவாகும் தெரிவித்தார்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், 32,385 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.