மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள கர்பலா அல்மனார் வித்தியாலய அதிபரை உடனடியாக பாடசாலையை விட்டு இடமாற்றுமாறு கோரி மாணவர்களும் பெற்றார்களும் திங்கட்கிழமை (29ஸ ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
காலை பாடசாலைக்கு முன்பாக ஒன்று கூடிய அப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களும் பெற்றோர்களும் குறித்த பாடசாலையின் அதிபரை இடமாற்றுமாறு கோரி கையில் சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குறித்த பாடசாலையின் அதிபரை மாணவர்களை தினமும் ஏசி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
அதிபரை உடன் இடமாற்றவும்இ பாடசாலை வளங்களை பாதுகாக்காத அதிபரை உடனே இடமாற்றம் செய்யுங்கள்இ பாடசாலையில் கொவிட் தொற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிபரை உடனே இடமாற்றம் செய்யவும்இ என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கி நின்று கோசங்களையும் எழுப்பினர்.
பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியையொருவருக்கு குறித்த அதிபர் காலைக் கூட்டத்தில் மாணவர்கள் மத்தியில் ஏசி அவமானப்படுத்தியதாகவும்இ வெள்ளம் காரணமாக பாடசாலை மாணவர்கள் வழமையாக செல்லும் வழி சேரும் சுதியுமாக காணப்படுவதால் பாடசாலைக்கான மற்றய நுழைவாயிலை திறக்காமல் அதிபர் மூடி வைத்திருந்ததாகவும் மாணவர்களின் கல்வியை சீரழிப்பதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். சம்பவத்தை அறிந்த காத்தான்குடி பொலிஸாரும் இங்கு வருகை தந்திருந்தனர்.
அங்கு வருகை தந்தை காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ்.உமர் மௌலானாவின் கவனதுக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து வலயக் கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கையின் கீழ் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவகத்தின் நிருவாகத்துக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரமீஸ் தலைமையில் அப் பாடசாலைக்கு வருகை தந்த அதிகாரிகள் குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுடன் மூன்று வாரங்களுக்குள் இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடமும் தனித்தனியாக அதிபருக்கு எதிராக முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்களையும் எழுத்து மூலம் பெற்றுக் கொண்டனர்.
இந்த வியடம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதாக இதற்கான தீர்வினை விரைவில் பெற நடவடிக்கை எடுப்பதாகவும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ்.உமர் மௌலானா தெரிவித்தார்.
செய்தியாளர் – வ.சக்திவேல்