இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள முடிவு
அரசாங்கத்துக்கு சாதகத்தை தரும் வகையிலும் பொதுமக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் வகையிலும் தமது போராட்டம் அமையாது என்று இலங்கை மின்சாரசபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
எனவே இலங்கை மின்சார சபை அமரிக்க நிறுவனத்துடன் செய்துக்கொண்ட உடன்படிக்கைக்கு எதிராக பொதுமக்களை இணைந்துக்கொள்ளும் வரை 72 மணித்தியாலப் பணிப்புறக்கணிப்புக்கு செல்லப்போவதில்லை என்று மின்சார சபை தொழிற்சங்கங்கள் தொிவித்துள்ளன.
மின்சாரசபை தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவா் ரஞ்சன் ஜெயலால் இதனை எமது செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார்.
சமையல் எாிவாயு மற்றும் எாிபொருள் என்பன தற்போது நாட்டில் பொதுமக்களுக்கு பிரச்சினைகளாக உள்ளன. இந்தநிலையில் பொதுமக்களை அசௌகாியப்படுத்தும் போராட்டம் ஒன்றுக்கு செல்லமுடியாது.
எனினும் அரசாங்கம், அமெரிக்க நிறுவனத்துடனான உடன்படிக்கையை ரத்துச்செய்யாவிட்டால், பொதுமக்களை தெளிவுப்படுத்தி அவா்களுடன் வீதிகளில் இறங்கிப்போராட்டப்போவதாக ரஞ்சன் ஜெயலால் குறிப்பிட்டார்.
ஏற்கனவே தமது போராட்டத்துக்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள், துறைமுக ஊழியா் சங்கங்கள் என்பன ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அவா் தொிவித்தார்.