இஸ்லாம் மதத்துக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய குறுஞ்செய்தியை அனுப்பிய குற்றத்துக்காக 26 வயதான பாகிஸ்தான் யுவதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் இது போன்ற மத விரோத சம்பவங்களுக்காக சுமார் 80 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பாகிஸ்தானில் மத எதிர்ப்புப் பேச்சுக்கள் தொடர்பாக காணப்படும் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.