வளர்மதி சனசமூக நிலைய ஸ்தாபகர் அமரர் பொன் நாகமணியின் பாரியாரான அமரர் பூரணத்தின் பூதவுடலானது மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலைய தாய்ச்சங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மக்களால் விசேட அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
அத்துடன் அரைப்பக்க கண்ணீர் அஞ்சலி பத்திரிகைப் பிரசுரம் ஒன்றைப் பிரசுரிக்கவும் வளர்மதி தாயச்சங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக வெள்ளிக்கிழமை (17/3/23) அன்று மதியம் அன்னாரது இல்லத்தில் இறுதிகிரியைகள் இடம்பெற்று
அதன் பின்னர் நிலைய அரங்கிற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு குறிக்கப்பட்ட நேரம் அஞ்சலி மரியாதைக்காக வைக்கப்பட்டு
சன சமூக நிலையம் சார்பாக அஞ்சலி உரைகள் இடம்பெற்று அதன் பின்பு தகனக்கிரியைக்காக சின்னத்தூ இந்து மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்படும் என வளர்மதி சனசமூக நிர்வாகத் தகவல்கள் மூலம் அறிய்முடிகிறது .