இலங்கைசெய்திகள்

கணவரால் எரியூட்டப்பட்ட காவல்துறை அதிகாரியான மனைவி மரணம்!

death

காலி, கோனாபினுவல பிரதேசத்தில் கணவரால் தீ வைத்து எரியூட்டப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் காவல்துறை சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

பலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

கோனாபினுவல காவல்நிலையத்தில் சார்ஜன்டாக பணியாற்றிவந்த 35 வயதான குறித்த பெண், பணி முடிந்து வீடு திரும்பியபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கணவரால் எரியூட்டப்பட்டுள்ளாரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான சந்தேகநபரான கணவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button