இலங்கைசெய்திகள்

வவுனியா குளக்கரையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!

death

வவுனியா குளக்கரையில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு. வவுனியா இராசேந்திரகுளம் குளப்பகுதியில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,


குறித்த நபர் இராசேந்திரகுளத்தில் மீன்பிடிப்பதற்காக இன்று (26.11) காலை தனது வீட்டில் இருந்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடுதிரும்பாத நிலையில் அவரது மனைவி குளத்து பகுதிக்கு சென்று தேடியுள்ளார்.


இதன்போது குளப்பகுதியில் காணப்பட்ட பிட்டியில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. மின்னல் தாக்கத்தின் காரணமாக இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் சிவலிங்கம் தினேஷ்குமார் (வயது – 28) என்ற இளம் குடும்பஸ்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் பிரதீப் மற்றும் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button