Uncategorized

குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

death

ஹட்டன், சிங்கமலை குளத்திலிருந்து ஆணொருவரின் சடலத்தை இன்று (17) காலை மீட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மேற்படி சிங்கமலை பகுதிக்கு விறகு வெட்டச் சென்றவர்கள் ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் யாரென இதுவரையில் அடையாளம் காணவில்லையென ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி குளப்பகுதியில் இருந்தே ஹட்டன் நீர் வழங்கல் சபைக்கு நீர் விநியோகம் வழங்கப்படுகின்றது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன்
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button