ஆணொருவரின் சடலம் யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
முடமாவடி சந்தியில் இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.