ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்த தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதிஅமைச்சர் இப்ராஹிம் இஸ்மாயில் இப்ராஹிம் காலமானார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் தனது 85வது வயதில் நேற்று காலமானார். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஈழத்தமிழர்கள் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டவர். சர்வதேச உறவுகளுக்கான பிரதிஅமைச்சராக இருந்த இவர் சர்வதேவ ரீதியான தமிழர் பிரச்சினைகளுக்கான பல பேச்சுகளில் ஈடுபட்டவர். நிறவெறி அசாங்கத்திற்காக போராடிய இவர் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர். இவர் 1998ம் ஆண்டு இலங்கை வந்த தென்னாபிரிக்க பாராளுமன்ற குழுவுடன் இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார் என்பது என்பது குறிப்பிடத்தக்கது. 1994 இல் நிறவெறி அரசாங்கம் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற தேர்தலில் இவர் வெற்றிபெற்றிருந்தார்.
Leave a Reply