இசையமைப்பாளர் மற்றும் நடிகரான விஜய் ஆண்டனியின், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது….
இந்நிலையில், நேற்று இரவு தனது அறையில் தூங்க சென்றவர், அதிகாலை 3 மணி அளவில், துப்பட்டாவால் பேனில் தூக்கு மாட்டியிருந்தார்.
அவரை வீட்டின் பணியாளர் உதவியுடன் கீழே இறக்கி காரின் மூலம் காவேரி…
மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் ஏற்கனவே…
அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.