பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலையில் (SBSCH) குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கடந்த மாதம் (மே 23) இடம்பெற்ற இந்த மரணம், குறித்த குழந்தைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் மயக்க மருந்தினால் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேககிக்கப்படுகின்றது.
SBSCH இன் அதிகாரி ஒருவர் மரணம் தொடர்பான விசாரணை நடந்து வருவதாக உறுதிப்படுத்தினார், ஆனால் மேலதிக விபரங்களை வழங்க மறுத்துவிட்டார்.
எவ்வாறாயினும், குறித்த மருந்து கொழும்பு, லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் (LRH) மூலமாக வழங்கப்படுவதாக அந்த அதிகாரி குற்றம் சாட்டினார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் மயக்க மருந்தை எடுத்துக் கொண்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.