மட்டக்களப்பு- மாங்காடு கிராமத்தில் நச்சு மீனைச் சமைத்து உட்கொண்டத்தில் 27 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில், சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு பெண்ணும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இரவு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,,.
மாங்காடு கடலில் மீனவர்களின் வலையில் சிக்கிய பேத்தை மீன்களைக்கண்ட மீனவர்கள் அது., உட்கொள்ள கூடாத மீனினம் என்பதைத் அறிந்து அதனை எடுத்து வீசியுள்ளனர்.
இந்நிலையில் அங்கு சென்ற ஒரு குடும்பத்தினர் மீனவர்கள் வீசிய மீன்களை பொறுக்கி எடுத்துள்ளனர்.
அப்போது “இது சமைப்பதற்கு உகந்த மீன் இல்லை , அதனை எடுக்க வேண்டாம், ” என மீனவர்கள் எச்சரித்தையும் பொருட்படுத்தாத அவர்கள் பேத்தை மீனைச் சமைத்து உண்டுள்ளனர்.
அன்றைய தினம் மாலை மீனை உண்ட நான்கு பேரும் திடீர் சுகயீனமுற்ற நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந் நிலையில் 27 வயதுடைய குடும்பப் பெண் அன்று உயிரிழந்து விட்டார். எனினும் மேலும் மூவர் அதே வைத்தியிசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர்களில் மற்றொரு பெண்ணும் உயிரிழந்தமை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.