இலங்கைசெய்திகள்

சோகத்தை ஏற்படுத்திய மாற்றுத்திறனாளி மாணவியின் மரணம்!!

death

2020 ஆம் ஆண்டு கா.பொ த உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்ற, மாணவி தேவ்மி ரன்சர திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திக்வெல்ல ரத்மலே பம்பரந்த சதர்மராஜா மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற குறித்த மாணவி அசாத்திய திறமைசாலியாவார்.

குருடுகஹ ஹெனே, இரத்மலையில் வசிக்கும் தேவ்மி ரன்சர குலதுங்க ராஜபக்ஷ, மிகவும் திறமையான மற்றும் விதிவிலக்கான மாணவியாவார். பிறக்கும்போதே கால்கள் உட்பட உடலின் பல பாகங்கள் செயல்படாத நிலையில் தன்னம்பிக்கை தளராத பெற்றோர், அவளைப் பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

தன் உடலின் குறைகளை ஒரு போதும் பிரச்சினையாக்கிக் கொள்ளாத தேவ்மி, பள்ளிக் கல்வியில் மிக உயர்ந்த திறமையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக அவர் இன்று காலமானதாக தகவல் வெளியாகியுள்ளமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button