இன்று காலை யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள புதிய சந்தை கட்டடத் தொகுதிக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சடலம் அவதானிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசேட தேவைக்கு உரிய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் . பொலிஸார் சடலத்தை மீட்டு அடையாளம் காணும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.