கிழக்கு லண்டன் நகரில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் 21 மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபான விடுதி ஒன்றில் கேளிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது என கூறப்படுகிறது.
இவர்கள், ஒன்று கூடி உரையாடிக் கொண்டிருந்த வேலையிலோ அல்லது நடனமாடிக் கொண்டிருந்த வேலையிலோ திடீரெனெ தரையில் விழுந்து இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறந்த மாணவர்களின் ரத்தத்தில் மெதனோல் எனும் இரசாயனப் பொருள் காணப்பட்டதாக ஈஸ்டர் கேப் மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளரான வைத்தியர் லிதா மதிவானே கூறியுள்ளார்.
எனினும் மரணத்தை ஏற்படுத்த கூடியதாக மேற்படி மெதனோல் அளவு இருந்ததா என்பதை ஆறிய ஆய்வுகள் நடைபெறுவதாக அவர் கூறியுள்ளார்.
இவர்கள் 13 முதல் 17 வயது வரையான பாடசாலை மாணவர்கள் ஆவர். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் மது அருந்த தடை விதித்திருந்த போதிலும் இந்த மதுபான விடுதியில் சிறுவர்களுக்கு மது விநியோகித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.