ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று வெள்ளிக்கிழமை காலமானார் என்று ஜனாதிபதி விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
அவர் தனது 73ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
1948 இல் பிறந்த ஷேக் கலீஃபா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது ஜனாதிபதியாகவும், அபுதாபியின் 16 வது ஆட்சியாளராகவும் இருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் 40 நாட்கள் உத்தியோகபூர்வ துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அந்த
நாட்டின் ஜனாதிபதி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூன்று நாட்கள் மூடப்படும் எனவும் குறித்த அமைச்சு இன்று ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.