சினிமாசெய்திகள்

டி.இமான் தனது மனைவியை விவாகரத்துச் செய்தார்!!

D.imman

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மோனிகா ரிச்சர்ட்டை 2008 ஆம் ஆண்டு டி. இமான் திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே இருவரின் விருப்பப்படி விவாகரத்து பெற தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டி. இமான் தற்போது அதனை அதிகாரபூர்வமாக சமூகவலைத்தளம் ஊடாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது “எனது நலன் விரும்பிகள் மற்றும் தீவிர இசை ஆர்வலர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருந்ததற்காக நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

எங்களின் வாழ்க்கை வெவ்வேறு பாதைகளில் செல்லவே மோனிகா ரிச்சர்ட்டும் நானும் நவம்பர் 2020 முதல் பரஸ்பர சம்மதத்துடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்ய தீர்மானித்தோம்.

எங்கள் நலன் விரும்பிகள், இசை ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவரையும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button