உலகம்செய்திகள்முக்கிய செய்திகள்

சிட்னியில் வெள்ளம்- 50 000 பேர் வரை பாதிப்பு!!

Cydney

சிட்னியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், சுமார் 50,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு மூன்றாவது முறையாக தாக்கிய வெள்ளதால், சிட்னியின் சில பகுதிகளில் நான்கு நாட்களில் சுமார் எட்டு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்துள்ளது.

இந்த வெள்ளத்தால், வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

தற்போதைய அவசரநிலைக்காக கிரேட்டர் சிட்னி முழுவதும் 100க்கும் மேற்பட்ட வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பல முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேலும் 50 பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறத் தயாராகுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான வானிலை அருகிலுள்ள ஹண்டர் மற்றும் இல்லவர்ரா பகுதிகளையும் தாக்குகிறது.

இந்த ஆண்டு 20க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் நியூ சவுத் வேல்சை சேர்ந்தவர்கள்.

Related Articles

Leave a Reply

Back to top button