இலங்கைசெய்திகள்

இ. போ.ச பாடசாலை சேவை ஒழுங்கில்லை – பெற்றோர்கள் விசனம்!!

CTB

அச்சுவேலியிலிருந்து காலை வேளையில் பருத்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் செல்லும் பாடசாலைச் சேவையான இ.போ.ச பேருந்துகள் கடந்த மூன்று மாதமாக பல நாட்களில் ஒழுங்கு முறையின்றிப் பயணம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுவேலி தொடக்கம் யாழ். பிரபல பாடசாலைக்களுக்கான மாணவர்கள் பயணம் செய்வதாகவும் ஆண்கள், பெண்களுக்கான பேருந்து சேவையில், சில நாட்களில் நேர தாமதமாகவும் சில நாட்களில் வராமலும் இருப்பதால் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

பருவகாலச் சீட்டுகளுடன் பயணம் செய்யும் மாணவர்கள், பருத்தித்துறையிலிருந்து வரும் வேறு இ.போ.ச பேருந்துகளில் ஏற முற்படும் போது, ஏற்கனவே பயணிகள் நிறைந்து காணப்படுவதால் அவர்கள் ஏற்றிச்செல்ல மறுப்பதாகவும் இதனால் மாணவர்கள் தாமதமாகவோ அன்றி, போக முடியாத நிலைமையோதான் ஏற்படுவதாகவும் , தற்போது போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரித்துள்ளமையால் இந்த பஸ் சேவை ஒழுங்கற்று இருப்பதால் மாணவர்கள்
அதிக சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

காலதாமதமாக
மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதால் அவர்களின் கற்றல் செயற்பாடுகளிலும் பல இடர்கள் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடரபாக உரிய பாடசாலை அதிபர்கள் இலங்கை போக்குவரத்துச் சபை, கோண்டாவில் பொதுமுகாமையாளருக்கு பல முறைப்பாடுகள் செய்தும் அவை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என அறியமுடிகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button