கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதல் முறையான 12,000ஐ கடந்துள்ளது.
அதன்படி இன்றைய பரிவர்த்தனை நிறைவடையும்போது, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 12,070.68 ஆக பதிவானதென கொழும்பு பங்குப் பரிவர்த்தனை தெரிவித்துள்ளது.
இதன் மொத்த புரள்வு 2.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.