100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் எனவும் 120,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் தாங்கிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 23 முதல் 29ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மசகு எண்ணெய் நாளை தரையிறக்கப்படும் எனவும் இரண்டு மசகு எண்ணெய் கப்பல்களும் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாகவும் அமைச்சரின் ட்விட்டர் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.