வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை முதலான பிரதேசங்களை சூழவுள்ள பகுதிகளில் உள்ள கால்வாய்களில் ஆறு முதலைகள் சஞ்சரிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
அந்த முதலைகளே கடற் பிராந்தியங்களிலும் சஞ்சரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், இன்றைய தினமும் காலி முகத்திடல் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சஞ்சரிக்கும் முதலை ஒன்றை அவதானித்துள்ளனர்.
கடந்த மூன்றாம் திகதி தெஹிவளை, தொடருந்து நிலையத்திற்கு அருகில் முதலை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, முதலைகளின் சஞ்சரிப்பு குறித்து அதிகளவில் பேசப்படுகிறது.
வெள்ளவத்தை, தெஹிவளை, கல்கிசை மற்றும் காலி முகத்திடல் கடற்பகுதிகளில் 2 முதலைகள், வனஜீவராசிரிகள் திணைக்கள அதிகாரிகளினால் அவதானிக்கப்பட்டுள்ளன.
எனினும், அந்த முதலைகளை இதுவரையில் பிடிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்தப் பகுதிகளில் சஞ்சரிக்கும் முதலைகள் குறித்து தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகிறது.