யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்துக்களின் பெரும்சமர் சமநிலையில் முடிவுற்றது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்குமிடையிலான 11ஆவது துடுப்பாட்டப் போட்டிகள் தொடர்சியாக இரண்டு நாட்கள் இடம்பெற்றன.
இப்போட்டியில் நாணையச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அதன்படி முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 59.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் சாம்சன் 80 பந்துகளில் 77 ஓட்டங்களையும், பிரியந்தன் 58 ஓட்டங்களையும் அதிபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில் சாகித்திரன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி 56 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியின் டிலக்சன் 40 ஓட்டங்களையும் சாகித்திரன் 18 ஓட்டங்களையும் அதிபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சார்பில் பரத்வாசன் 4 விக்கெட்டுக்களையும், பிரியந்தன், கஜானன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
84 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள யாழ் இந்துக்கல்லூரி தமது இரண்டாம் இன்னிங்சில் 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களைப்பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக்கல்லூரி அணி சார்பில் கஜாநாத் 30 ஓட்டங்களையும், பிரியந்தன் 20 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் கொழும்பு இந்துக்கல்லூரி சார்பில் சதூர்சன் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அத்துடன், தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி 31 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி 8 விக்கெட்டுகளை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
துடுப்பாட்டத்தில் கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில் கவிசாகரன் 27, உசாந் 12 ஓட்டங்களை அதிகமாக பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் யாழ் இந்துக் கல்லூரி சார்பில் அர்ஐன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்படி, 11ஆவது இந்துக்களின் பெரும்சமர் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.
சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ் இந்துக்கல்லூரி அணி வீரர் சாம்சனும், சிறந்த பந்துவீச்சாளராக கொழும்பு இந்துக்கல்லூரி அணி வீரர் சாகித்திரனும், சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரர் ராகுல் ராவிட்டும், போட்டியின் ஆட்டநாயனாக கொழும்பு இந்துக் கல்லூரி அணி வீரர் சஜிதரனும் தெரிவுசெய்யப்பட்டனர்.ங்களைப் பெற்றுக்கொண்டது.