இந்திய அணி வீரர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது,
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 416 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் ரிசாப்பண்ட் 146 ஓட்டங்களையும் ரவீந்திர ஜடேஜா 104 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பும்ரா இந்தப் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார். தான் துடுப்பெடுத்தாடிய ஒரு ஓவரில் இந்திய அணிக்காக 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். டெஸ்ட் போட்டி ஒன்றில் மேற்கிந்திய தீவுகளின் பிரைன் லாரா ஓவர் ஒன்றில் 28 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
ஜஸ்பிரித் பும்ரா ஒரு ஓவரில் 29 ஓட்டங்களை அதிகப்படியாகப் பெற்றமை உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.