நாடு முழுவதிலும் இறக்குமதி செய்யப்படும் பால் மா மற்றும் தேசிய பால் மா என்பவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக பால் மா தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவுக்கான கெர்டுப்பனவுகளை முறையாக செலுத்தாமையினால், வெளிநாட்டு பால் மா நிறுவனங்கள் புதிய கையிருப்புகளை அனுப்புவதில்லை எனவும் பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளாா்.
தேசிய பால் மா விநியோகம் நடவடிக்கைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக தேசிய பால் மாவுக்குட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளாா்.
பொதுக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பால் மா இருப்பு இல்லாததால், ஒரு பக்கெட் பால்வை கொள்வனவு செய்வதற்று சில கடைகளில் 10 யோகட் கப்களை கொள்வனவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.