இலங்கைசெய்திகள்

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிக்கு கொவிட் தொற்று!!

covid19

வவுனியா மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த அதிகாரிக்கு சுகவீனம் ஏற்பட்டதையடுத்து துரித அன்ரியன் பரிசோதனையினை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது அவருக்கு கோவிட் தொற்று நோய் நேற்று (05) உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்டமையினால் கோவிட் 19 இற்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்களை மிகக் குறைவான அளவிலேயே உணர்வதாக தெரிவித்தார்.

செய்தியாளர் கிஷோரன்

Related Articles

Leave a Reply

Back to top button