இஸ்ரேலில் புதிய வகை கொவிட் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொவிட் வைரஸ் மற்றும் சாதாரண காய்ச்சலுக்கான (ப்ளூ) நோய் அறிகுறிகள் காணப்படுவதால், இதற்கு ‘ஃப்ளுரோனா’ என பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய இஸ்ரேலைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இந்த புதிய வகை கொவிட் திரிபு உறுதியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண், கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர் எனவும், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன், கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவருக்கு பாரிய அளவில் உடல்நிலை பாதிக்கப்படவில்லை என்பதுடன், விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் இஸ்ரேலின் சுகாதாரத்துறை ஆய்வுகளை முன்னெடுத்து வருவதுடன், இருவகை தொற்றுக்கள் ஒன்று சேர்வதால் பாரியளவில் பாதிப்பு ஏற்படும் என அச்சம் கொள்வதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.
ஒமைக்ரொன் பாதிப்பினால், இஸ்ரேலில் ஐந்தாவது கொவிட் அலை ஆரம்பமாகியுள்ள நிலையில், தற்போது இந்த புதிய வகை கொவிட் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.