தேவையான பொருட்கள்:
நூல்கோல் – 3 சுமாரான அளவு
பெரிய வெங்காயம் – 4
தனியா – 2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
பச்சை கொத்தமல்லி – ஒரு கட்டு
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதிற்கு
கறிவேப்பிலை
கடுகு
பூண்டு – 2 பற்கள்
கடலைப்பருப்பு – 1 டீஸ் ஸ்பூன்
எண்ணெய் – 1 கரண்டி
செயல்முறை:
தனியா, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் இவற்றை சிறிது தண்ணீரில் ஊறப் போடவும் நூல்கோல், வெங்காயம் இரண்டையும் தோல் நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி தனித் தனியாக வைக்கவும்.
பச்சை கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி வைக்கவும். முதலில் நூல்கோலை அடி கணமான பாத்திரத்தில் மஞ்சள் பொடியையும் அளவான தண்ணீர் விட்டு வேகவிடவும். வெந்ததும் இறக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தைப் போட்டு சுருள வதக்கி, வெந்த நூல்கோலை அதில் கொட்டி ஊறப்போட்ட தனியா, கடலைப் பருப்பு, அரைத்த விழுதையும் கொட்டி உப்பு சேர்த்து கொத்தமல்லியையும் போட்டு சேர்த்து கிளறி இறக்கவும்.
கமகமவென்று ஜோராக இருக்கும். பூரி, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றிற்கும் தொட்டு கொள்ளலாம். தோசைக்குள் வைத்து வார்த்தால் சுவையான மசாலா தோசை ரெடி. உருளைக்கிழங்கு சேர்க்கக்கூடாதவர்கள் இதைச் சாப்பிடலாம்.
~ திருமதி தேவா மாதவன்